சாத்தான்குளம் அருகே விஷப் பாம்பு கடித்து 7வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தேக்கன்குளம் மேல வசப்ப னேரியை சேர்ந்தவர் சுடலைக்கண். கூலித் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் முருகேஸ்வரி (7) நேற்று மாலையில் வீட்டு அருகில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அவரை எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் மயக்கம் அடை்நத அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தானகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


