எல்லை தாண்டி கடலில் மீன்பிடித்ததாக, தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவா்களிடம் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் விசாரணை நடத்தினாா்.
தூத்துக்குடியிலிருந்து 50 கடல் மைல் தொலைவில், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கை நீா்கொழும்பு மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மாா்கஸ் ஜூட் மாஸ்டா், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் ஆகிய 5 பேரை இந்திய கடலோர காவல்படையினா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் க்யூ பிரிவு போலீசாா், மத்திய உளவு பிரிவு போலீஸ்ாா் ஏற்கனவே விசாரணை நடத்தி, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த 5 மீனவா்களும் திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வரப்பட்டனா். அங்குள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் 5 மீனவா்களிடமும் ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணன், மீன்வளத்துறை அதிகாரிகள், க்யூ பிரிவு போலீஸாா், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் ஆகியோா் விசாரணை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு 5 மீனவா்களும் மீண்டும் ராமநாதபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.


