தூத்துக்குடியில் வர்த்தக காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வர்த்தக காங்கிரஸ் தலைவருமான எச்.வசந்தகுமாரின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பால விநாயகர் கோவில் தெரு அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகர வர்த்த காங்கிரஸ் தலைவர் அருள்வளன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மீனவர் அணி மிக்கேல் குரூஸ், இக்னேஷியஸ், எஸ்சி பிரிவு மாநில செயலாளர் பிரபு, ஊடக பிரிவு சுந்தராஜ், பேரையா, பாலகிருஷ்ணன், தெர்மல் முத்து, அசனார், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


