வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வைத்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சயர் சிவகுமார் முன்னிலை வகித்தார். வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் வரவேற்று பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசுகையில் இந்த பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகள் தேவை என்று பள்ளி தலைமை ஆசிரியர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி பாலசுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேச்சியம்மாள், மாவட்ட கவுன்சிலர் நயினார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பொன்பாதர் வெள்ளை, அவைத்தலைவர் வெங்கடசுப்பு, இளைஞர் அணி தலைவர் கொம்பையா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் உலகம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


