காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாக துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டம் சார்பில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் கருத்து கேட்புகூட்டம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் பேசுகையில், “வணிகர்கள் அரசு விதிகளின்படி விற்பனை செய்திடவேண்டும், காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
கருப்பட்டி கொட்டான்களில் லேபிள் ஒட்ட வேண்டும். ஆடு, மாடு, பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும்போது உரிய அனுமதி பெற்று அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டு கடைக்கு கொண்டுவர வேண்டும். உணவங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள் கையுறை அணிய வேண்டும், பணியாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனையில் தெற்று இல்லை என்பது குறித்த சான்று பெறவேண்டும்.
உணவகங்கள், தேனீர் கடைகளில் பணிகள் முடிந்தபின் கழிவுநீரை சாலையிலோ, பொது இடங்களிலோ கொட்டக் கூடாது. அதற்கு உறிஞ்சு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். நிறைவாக விளாத்திகுளம் புதூர் பகுதி அலுவலர் சிவகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில், வேம்பார், சூரங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.


