தூத்துக்குடி நகர்புறக் கல்வி வட்டாரப் பூப்பந்தாட்டப் போட்டியில் ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகள் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நகர்புறக் கல்வி வட்டார அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி அணிகள் பங்கேற்றுச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
14 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் பிரிவில் APC வீரபாகு பள்ளியையும், 17 வயதுக்குட்பட்டோர் சீனியர் பிரிவில் செயின்ட் தாமஸ் பள்ளியையும் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் சூப்பர் சீனியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளியையும் வென்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்றனர்.
மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஹோலிகிராஸ் பள்ளி மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியைகள் சோபியா, சுஜி, பயிற்சியாளர் பாலசிங் மற்றும் பெற்றோர்கள் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இப்போட்டிக்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செயின்ட் தாமஸ் பள்ளி நிர்வாகமும், பொறுப்பாளர் குப்புசாமியும் செய்திருந்தனர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளைத் தூத்துக்குடி மாவட்டப் பூப்பந்தாட்டக் கழகச் செயலாளர் கண்ணன் நேரில் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.


