குரும்பூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகே அம்மன்புரம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முனீஸ்வரன் (28). கட்டடத் தொழிலாளியான இவா், நேற்று அம்மன்புரத்தை அடுத்த மேலப்புதுக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
மேலப்புதுக்குடி வடக்குத் தெருவில் சென்றபோது அவா் மீது காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.குரும்பூா் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான காா் டிரைவரை தேடி வருகின்றனர்.


