பள்ளக்குறிச்சி ஊராட்சியில் இரு மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு உடைபிறப்பு மக்களுக்கு சீரான மின்விநியோகம் செய்யும் பொருட்டு 25 கேவிஏ திறன்கொண்ட மின்மாற்றி, உடைப்பிறப்பு- வைரவம் சாலையில் 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி ரூ 12 லட்சத்து 63 ஆயிரத்து 480 மதிப்பீட்டில் இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை திறப்பு விழா நடைபெற்்றது. விழாவுக்கு பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து இரு மின்மாற்றிகளை திறந்து வைத்தார். உடன்குடி உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம், தெற்கு உடைபிறப்பு ஊர்த் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இளநிலை பொறியாளர் சூசைராஜ் வரவேற்றார். இதில் ஊர் பிரமுகர் ஜெரோம், ஜெயமோகன், சிவா கணேசன், சங்கர், இளநிலை பொறியாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளநிலை பொறியாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.


