சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் ஜவகர்லால் நேரு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் சாத்தான்குளம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆ.க. வேணுகோபால் தலைமையில், வடக்கு வட்டார தலைவர் வி. பார்த்தசாரதி முன்னிலையில் ஜவகர் லால் நேரு உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஜோசப் அலெக்ஸ், வழக்குரைழர் கோபாலகிருஷ்ணன், அமுதுண்ணாக்குடி கிராம கமிட்டித் தலைவர் வி’ஜேந்திரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


