முதலூரில் கனிமொழி எம்பி நிதியிலிருந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் மற்றும் மூலிகை சிறப்பு கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தொகுதி நிதியிலிருந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பொன்முருகேசன் தலைமை வகித்தார்.
இந்த முகாமில் தொழுநோய், காசநோய், எய்ட்ஸ், முதல் முழு உடல் பரிசோதனை, கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட சிறப்பு முகாம் மற்றும் சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி நடந்தது. இந்த முகாமில் சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு பொது மக்கள் மற்றும் நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதால் கண் தானம் செய்து அதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.


