கருங்குளம் பழமையான ஊராகும். இந்த ஊரில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் வெங்கிடாசலபதி கோயிலும், தம்பதி சகிதமாக இருக்கும் மார்த்தாண்டேஸ்வர் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயங்களுக்கு நித்திய தேவைகளை பூர்த்தி செய்ய மலையடிவாரத்தில் சம்பன் குளம் என்றவொரு குளம் உள்ளது. இந்த குளம் தூர்ந்து போய் விட்டது. இதனால் அமலை செடிகள் அடர்ந்து உபயோகபடுத்த முடியாத அளவுக்கு மாறி விட்டது. மேலும் சிறு மழை பெய்தால் கூட குளத்தில் தண்ணீர் பெருகி கருங்குளம் மூலைக்கரைப்பட்டி சாலையில் வெள்ளம் பெருகி போக்குவரத்து தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இங்கு வரும் பக்தர்களும், ஊர் மக்களும் இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்களிடம் கொண்டு சென்றனர். அவர் இந்த குளத்தினை தூர் வார நடவடிக்கை எடுத்தார்.
இதற்படி மாவட்ட நிர்வாக நிதி உதவியுடன் எக்ஸ்னரோ தனியார் நிறுவன வாடகை இல்லா இயந்திரம் மூலம் இந்த பணி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ராட்சத இயந்திரம் மூலம் இந்த பணி துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹர் அகமது தலைமை வகித்து பணியை துவங்கி வைத்தார். நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவராஜன் முன்னிலை வகித்தார். மாடல் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார்.
கருங்குளம் சமூக ஆர்வலர் செந்தில்குமார், மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் சதீஷ், வருவாய் ஆய்வாளர் மகாராஜன், கருங்குளம் பஞ்சாயத்து கிளர்க் சங்கரபாண்டியன், கிராம உதயம் தன்னார்வ தொண்டர் செல்வன்துரை, ஒப்பந்ததாரர் கே.பி.மணி, கிட்டாட்சி ஆப்பரேட்டர் பொன்னன்குறிச்சி துரை, ஊர்பிரமுகர்கள் சுடலைமுத்து, அஜீத், வெங்கடேஷ், ஜாபர்அலி, மணிகண்டன், சுடலைமுத்து, கணபதி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் செய்திருந்தது.


