தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்த பாத்திமா காவ்யா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் குளத்தில் நீரில் மூழ்கி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. அந்த சமயத்தில் போலீசாருடன் அவரது உடலை மீட்பதற்கு உதவியாக கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முகேஷ்ராஜா, சுரேஷ்வேல்முருகன், சிவகுமார், முத்துக்குமார் ஆகிய நான்கு இளைஞர்கள் உதவி செய்தனர். அவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் ஆகியோர் இளம்பெண் உடலை மீட்க உதவிய கருங்குளத்தைச் சேர்ந்த முகேஷ்ராஜா, சுரேஷ்வேல்முருகன், சிவகுமார், முத்துக்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர்.


