செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள ராம மாதவ தீர்த்தர் ஆலயத்தில் ரத சப்தமி சிறப்பு பூஜை நடந்தது.
செய்துங்கநல்லூர் அக்ரஹார தெருவில் அமைந்து இருக்கும் ஆலயம் நவநீத கிருஷ்ணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தினை பிரதிட்சை செய்த ராம மாதவ தீர்த்தர் ஜீவ சமாதி அடைந்த இடமும் இந்த கோயிலின் பின்புறம் உள்ளது. அருகிலேயே இந்த அறநிலைத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோயிலும் உள்ளது. ஒரு காலத்தில் மிகவும் சிறப்பாக பூஜை நடந்த இந்த கோயிலில் தற்போது ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது. இககோயிலில் ராம மாதவ தீர்த்தர் ஜீவசமாதி அடைந்த நாள் ரத சப்தமி நாளாகும் எனவே இந்த கோயிலில் ரத சப்தமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதையட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, அனைத்து தெய்வங்களுக்கும் அபிசேகம் ,அலங்காரம் தீபாதரணை நடந்தது. இதையட்டி ஏரளாமன பக்தர்கள் காலையில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இரு கால பூஜை நடந்து வந்த வரதராஜ பெருமாள் கோயிலில் தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. தொடர்ந்து கோயிலுக்கு மூன்று கால பூஜை நடைபெற ஆவண செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


