தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிப்பதற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று புறையூரைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் தனது வேனில் குரங்கணி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு புதூர் வழியாக வந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் கோட்டூரைச் சேர்ந்த ஸ்டான்லி பிரசாத் என்பவர் தனது டிப்பர் லாரியில் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு ஏரல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இரு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் பள்ளி வாகனத்தில் வந்த 7 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் வேனை ஓட்டி வந்த தமிழ்வானனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதற்கிடையில் அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஆம்புலன்ஸில் படுகாயம் அடைந்த மாணவ மாணவிகள் மற்றும் வேன் ஓட்டுநர் அனைவரும் ஏரலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


