இடை செவல் கிராம சேவை மையத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு கோவில்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். முன்னாள் பஞ்.தலைவர் ரெங்கநாயகி ரெங்கபெருமாள் முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். ஊராட்சி செயலர் ஆதிலட்சுமி வரவேற்றார்.
மருத்துவ முகாமில் மருத்துவர் சரவண விஜய் மற்றும் செவிலியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதேவி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல் தலைவலி காது மூக்கு தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் மூலமாக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் பெல்ஸ்டார் நிதி நிறுவனத்தின் மதுரை மண்டல தலைமை அலுவலர் பாக்கியராஜ், கோவில்பட்டி மண்டல மேலாளர் முத்துமாலை, கோவில்பட்டி கிளை மேலாளர் மணிகண்டன் தென்காசி திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஒட்டப்பிடாரம் வட்டார பயிற்றுநர் சுதா, பெல்ஸ்டார் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


