சன கண மன.இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப்பாடல் பாடப்பட்டது.தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “சன கன மண” இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தேமாதரம்” தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் ஒன்றுபட்ட கலாச்சாரத்தின் சின்னமான ஜன கண மன, நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்டது மற்றும் 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் முதன்முதலில் பாடப்பட்டது.
முதன்முறையாக கீதம் பாடப்பட்ட அமர்வு, கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள பவ்பஜார் தெருவில் உள்ள ஒரு மாடி அமைப்பான பாரத் சபாவில் நடைபெற்றது.


