தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு 48 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநில மீனவர் அணி இணை செயலாளர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், கனகராஜ், தேவகி, போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் முருகன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி 28 வது வட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வட்டச் செயலாளர் கதிரேசன் தலைமையில் மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சரவணன், செல்வம், நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


