தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 227.20 மிமீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதற்கிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேலும் நகர்ந்து இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 227.20 மிமீ மழை பெய்துள்ளது.
மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்)
தூத்துக்குடி 21.00
ஸ்ரீவைகுண்டம் 8.40
திருச்செந்தூர் 8.00
காயல்பட்டினம் 6.00
குலசேகரப்பட்டினம் 8.00
சாத்தான்குளம் 6.20
கோவில்பட்டி 12.00
கழுகுமலை 13.00
கயத்தாறு 5.00
கடம்பூர் 24.00
எட்டயபுரம் 9.60
விளாத்திகுளம் 10.00
காடல்குடி 21.00
வைப்பார் 25.00
சூரங்குடி 34.00
ஓட்டப்பிடாரம் 10.60
மணியாச்சி 2.20
வேடநத்தம் 1.00
கீழஅரசடி 2.20
மொத்தம் 227.20
சராசரி மழையளவு 11.96


