சிந்து சமவெளி ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக பேச வந்தார். இவர் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்திற்கு தீடீர் விசிட் செய்தார்.
சிவகளை தொல்லியல் களத்துக்கு வந்த அவரை அகழ்வாய்வு இணை இயக்குனர் விகடர் ஞானராஜ் வரவேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் உடன் வந்தார். சிவகளையில் கிடைத்த பொருள்களை பற்றியும் ,அதன் கார்பன்டேட் அறிதல் குறித்து, சிவகளையில் சைட் மியூசியம் அமைப்பது குறித்து அவர் தொல்லியல் அலுவலர்களுடன் விவாதித்தார். அவருடன் ஏரல் தாசில்தார் கண்ணன், ஸ்ரீவைகுண்டம் ஆணையாளர் சுரேஷ், கூடுதல் ஆணையாளர் ஆண்டோ, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், துணை தலைவர் கைலாசம், சமூக ஆர்வலர் பிச்சையா, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் குமார், பஞ்சாயத்து செயலர் வெங்கடேஷ், விவசாய அணி தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் மபிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


