ஸ்ரீவைகுண்டம் வட்டார வளமைய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலைவிழா நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி அறிவுறுத்தலின்படி, பள்ளிகளில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கலைத்திறனை மேம்படுத்திடும் வகையில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு தொடர் கொண்டாட்டமாக சிறப்பு பயிற்சி, போட்டிகள் வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளமைய அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான கலை விழா ஸ்ரீவைகுண்டம் வட்டார வளமைய அலுவலகத்தில் நடந்தது.
விழாவிற்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா தலைமை வகித்தார். ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி தலை¬மையாசிரியை ராணி முன்னிலை வகித்தார்.
விழாவில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளின் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று நடனாடியும், நாடகம் நடித்தும் மற்றும் பாடல்களை பாடியும் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவியர்களின் அசத்தலான கலக்கலான கலைநிகழ்ச்சிகளை கண்டு பார்வையாளர்கள் பெரும் வியப்பிற்கு உள்ளாகினர்.
இதில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலையா, அனிதா, சிறப்பு பயிற்றுநர்கள் மாரிமுத்து, விஜயலெட்சுமி, செல்விபட்டு, ரீனாகேத்ரின், ரெக்ஸி, பரமேஸ்வரி, இயன்முறை மருத்துவர் பத்மஸ்ரீபாபு, ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


