தமிழகத்தில் கடந்த காலங்களில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.
இந்த தொழுகையை பள்ளிவாசல் இமாம் உமர் பாரூக் தலைமை வகித்து நடத்தினார். தொழுகையில் பள்ளிவாசல் தலைவர் சாதிக், செயலாளர் கரீம் பாஷா, பொருளாளர் அப்துல்கனி, துணைத்தலைவர் அப்துல் காதர், மீரான்யாக்கூப், சமீம், செய்யது இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


