தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (27.08.2024) இன்று சிங்கத்தாகுறிச்சி அருகேயுள்ள மேலப்பூவாணி கிராமத்தில் வைத்து நடைபெற்றது.
கீழப்பூவாணி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ரா.ரெங்கநாத சுவாமி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.கணேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 39 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 39 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திரு.உடையார், சுகாதார பார்வையாளர் திருமதி.ந.முத்து லட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர் செல்வி.மாரியம்மாள், சுகாதார தன்னார்வலர்கள் திருமதி.சுமதி திரு.முத்துவேல், திரு.வேலுச்சாமி சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


