ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை பெருமாள் சுவாமி, முப்பிடாதி அம்மன், உச்சிமாகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா தொடர்ந்து ஐந்து நாட்கள் நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது.
ஆறாம்பண்ணை ஊராட்சி மன்றத்தின் சார்பாக கொடை விழாவிற்கு தேவையான அனைத்து அனுமதி மற்றும் உதவிகளை செய்தமைக்காக விழாவின் இறுதி நாள் அன்று திருக்கோவில் விழா குழுவினர்களின் சார்பாக ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக்அப்துல் காதருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.


