தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் லட்சக்கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை கருங்குளம் பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது ஆடி மாத காற்று அதிகமாக வீசியதால் தீ மள மளவென பரவி அடுத்தடுத்து வாழை தோட்டங்களில் பரவியது இதனால் பல்லாயிரக்கணக்கான வாழைகள் எரிந்து நாசமாயின தகவல் அறிந்து வந்த விவசாயிகள் தீயை அணைக்க முடியாமல் திணறினர் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர் ஆனால் வாழை தோட்டத்தில் சருகுகள் காய்ந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இதனால் தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர் இதற்கிடையில் கருங்குளம் வாழைத்தோட்டம் என்பது திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலை அருகே உள்ளதால் வாழை தோட்டத்தில் பற்றிய தீயின் புகை மூட்டங்கள் காற்றின் காரணமாக நெடுஞ்சாலை முழுவதும் பரவியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்


