
நெஞ்சு வலி அவசரமாக பாளை அரசு மருத்துவமனையில் எமர்ஜென்ஸி வார்டில் சேர்க்கப்பட்டேன்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த மரு.கி. செந்தில் ராஜ் அவர்கள் பரிந்துரையின் கர்ரணமாக எனக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்தில் ஓட்டை இருக்கிறது. அதற்காக ஸ்டெண்ட் வைக்க வேண்டும் என சிகிச்சை நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 நாளில் சிகிச்சை முடிந்து விட்டது.
சிகிச்சை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் குவைத் கனவு இருந்து கொண்டே இருந்தது. எப்படியாவது குவைத் சென்று விடுவோம். அங்குள்ள மக்களை சந்திப்பேன் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.
9.9.2022 அன்று டிஸ்சார்ஜ் வந்தது. பெரிய டாக்டர்கள் வந்தார்கள்.அவர்களிடம் நான் 15.09.2022 அன்று குவைத் செல்லவேண்டும் என்றேன். அவர்கள் இப்போது வேண்டாம். என மறுத்து விட்டார்கள்.
மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. முதல் விமான பயணம், முதல் நாள் வெளிநாட்டு பயணம். முதல் முதலில் நாம் பிறந்து 56 வருடங்களுக்கு பிறகு கிடைத்த அற்புத வாய்ப்பு கை நழுவி போய் விட்டதே. மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கிடையில் நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே என் வீட்டார் குவைத்துக்கு நான் வரஇயலாது என கூறி விட்டார்கள். எனவே எனக்கு பதிலாக வேறு அன்பர்களை கூட்டிக்கொண்டு பேராசிரியர் சுதாகர் செல்ல ஆயத்தமாகிவிட்டார்.
வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தேன். என்னை பார்க்க பலர் எனது வீட்டுக்கு தினமும் வந்துகொண்டிருந்தார்கள். வந்தவர்களில் பலர் மிகவும் வி.ஐ.பி தான். ஆனாலும் எனக்கு என்னமோ குவைத் பற்றிய எண்ணம் தான் சுற்றிக்கொண்டே இருந்தது. சுதாகர் அய்யா எங்கிருந்து விமானத்தில் ஏறி இருப்பார். எப்படி சென்றிருப்பார். அங்கே நிகழ்ச்சி எப்படி இருந்து இருக்கும் என பல கற்பனையோடு நான் முக நூலை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
எப்போதுமே டாக்டர் சுதாகர் பயணம் செய்வதில் வல்லவர். மலை பயணங்களை நன்றாக செய்வார். பொதிகை மலை பயணம் உள்பட பல்வேறு பயணங்களை மிகவும் சிறப்பாக செய்வார். எந்த கல்லூரி, பள்ளிக்கு பேச கூப்பிட்டாலும் உடனே சென்று விடுவார். மிகவும் சுறுசுறுப்பானவர். எப்போதுமே தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பார்.
இவர் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழத்தில் தொல்லியல் துறைவர பாடுபட்டவர். தற்போது தொல்லியல் துறையின் பொறுப்பு துறைத்தலைவராக உள்ளார். இவர் இவரிடம் தொல்லியல் கற்கும் மாணவ மாணவிகளை பல இடத்துக்கு கூட்டிச்சென்று ஆய்வு செய்யவும், கல்வெட்டை படிககவும் ஏற்பாடு செய்து வருகிறார். இவருக்கு துணையாக உதவிபேராசிரியர்கள் முனைவர் முருகன், முனைவர் மதிவாணன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மாணவ மாணவிகளை தனது சொந்த குழந்தைகளை அழைத்து செல்வது போலவே கூட்டிச்செல்வார். அவர்களோடு நானும் பயணித்து இருக்கிறேன்.
அதோடு மட்டுமல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதே தங்களது பயணத்தினை பற்றி உடனே முகநூலில் பதிவை ஏற்றி விடுவார். எனவே தான் குவைத் செல்லும் நமது பேராசிரியர் முகநூலில் ஏதாவது பதிவை ஏற்றி இருக்கிறாரா என எதிர்பார்த்து காத்து இருந்தேன்.
அதன் படியே அவர் முகநூலில் குவைத் பயணம் குறித்து குறிப்புகள் வெளியானது. அதை நான் ஆர்வத்துடன் படித்தேன்.
அதற்கு தலைப்பாக அவர் மலைக்க வைத்த குவைத் பயணம் என எழுதியிருந்தார். அந்த முக நூல் பதிவை பார்த்து எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. ஏனென்றால் நாம் செல்லாவிட்டாலும், குவைத் பயணத்தினை வெளியிடும் நல்ல அன்பர் சென்று இருக்கிறாரே என சந்தேசாமடைந்தேன். அவர் அந்த முகநூலில் கூறியதை நான் உங்களிடம் பகிர்கிறேன்.
குவைத்தில் வாழும் தமிழர்களில் நிறைய பொறியியல் படித்தவர்கள். அவர்கள் 2000ஆம் ஆண்டு “தமிழ் நாடு பொறியாளர் குழுமம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதனில் சுமார் 500 பொறியாளர்கள் உருப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு வருடா வருடம் தமிழகத்திலிருந்து பல துறையைச் சார்ந்த மூன்று வல்லுநர்களை குவைத்திற்கு அழைத்துச் சொற்பொழிவாற்ற வைக்கிறனர்.
கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நானும், தைரோகர் தொழில் நுட்பம் நிறுவனத்தின் (ஜிலீஹ்க்ஷீஷீநீணீக்ஷீமீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீவீமீs லிtபீ) நிறுவனர், டாக்டர் வேலுமணியும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர்,டாக்டர் ஜாகிர் ஹுசைனும் அழைக்கப்பட்டோம்.
டாக்டர் வேலுமணி 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள தைரோகர் தொழில் நுட்பம் நிறுவனத்தை உருவாக்கிய தொழில் அதிபர். இவர் ஙிஷிநீ வேதியியல் படித்தவர், விஷிநீ நுண்ணுயிரியால் படித்து றிலீஞி படம் பெற்றவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து 1000 கோடி ரூபாய்க்கும் மேலான நிறுவனத்தை உருவாக்கியவர். ஒரு சாதனையாளர் என ஒத்துக் கொள்வீர்கள் என ஆழமாக நம்புகிறேன்.
அடுத்து முத்தாலாங் குறிச்சி காமராசு சொற்பொழி வாற்ற இருந்தார். உடல் நிலை காரணமாக அவரால் பயணிக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக, டாக்டர் ஜாகிர் ஹுசைன் அழைக்கப் பட்டார். இவர் ஔவையாரின் ஆத்திச்சூடியை அரபிக் மொழிக்கு மொழி பெயர்த்தவர். இதனை மையமாக வைத்து நிறையக் குறும்படங்களை வெளியிட்டவர். அவரின் உழைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
தமிழ் நாடு பொறியாளர் குழுமம் எனக்கு குவைத் வந்து அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்து வயது முதிர்வு பற்றிப் பேச அழைத்தது? அதற்காக வீசா மற்றும் விமான பயணச்சீட்டை அனுப்பி வைத்தது. என் வீசாவுக்கானச் செலவை குவைத்தில் உள்ள தங்கப் பணை (நிஷீறீபீமீஸீ ஜீணீறீனீ றிஸ்t. லிtபீ, ரிuஷ்மிt) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதன் நிறுவனர் பலவேசமுத்து. இவர் நம் திருநெல்வேலி மாவட்ட வள்ளியூர்காரர். தன் கடின உழைப்பால் பண்நாட்டு நிருவனத்தை உருவாக்கியவர். இருப்பினும் திருச்சியைச் சார்ந்த அசோக் என்ற பொறியாளர்தான் என் பயணத்தின் அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்.
வெளி நாட்டுப் பயணத் தேவை பாஸ் போர்ட் மற்றும் வீசா. பாஸ் போர்ட் என்பது எந்த நாட்டுக்காரர் எந்த ஊர்க்காரர் என்பதனை விளக்கும் சிறு புத்தகம். வீசா என்பது நாம் செல்ல விரும்பும் நாடு மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்த ஒரு பக்க தாள். இந்த இரண்டுடன் பயணச் சீட்டும் அவசியம். இதனைச் சமர்ப்பிக்கும் பட்சம் பயணம் அனுமதிக்கப்படும்.
நான் திருவனந்தபுரம் ஏர்ப்போர்டடில் இருந்து எனது அனுமதி சீட்டை காட்டினேன். ஆனால் என் பயணத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் கேட்டேன். போலிஸ் ஆய்வறிக்கை வேண்டும் என்றார்கள். நான் மூன்று நாட்கள் பயணத்திற்குத் தேவை இல்லை என்றேன். என் பாஸ் போர்ட் மற்றும் வீசாவைச் சுற்றி பத்து பேர்கள் சூழ்ந்தனர்.
சரி அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என நினைத்து
அங்கிருந்த இருக்கையில் அமரும் கொண்டேன். சில நிமிடங்கள் கழித்து என் பெட்டியையும் வாங்கிச் செல்கின்றனர். ஏதோ சோதனை செய்யப் போகிறார்கள் என நினைத்தேன். மாறாக சில நிமிடங்களில் விமான நுழைவுச் சீட்டுடன் வந்தனர். சார், உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் எனக் கூறி வீனீனீவீரீக்ஷீணீtவீஷீஸீனுக்கு அனுப்பிவைத்தனர். நிரந்தரமாக குவைத்தில் வேலை பார்க்கப் போகும் போது போலிஸ் ஆய்வறிக்கை அவசியம் வேண்டும். அவர்கள் நான் குவைத்திலேயே தங்கிவிடுவேன் எனப் பயந்து விட்டார்கள் போலும்.
மினீனீவீரீக்ஷீணீtவீஷீஸீ என்பதனை உள்நாட்டைச் சார்ந்த சோதனை சாவடி எனலாம். இவர்கள் பாஸ் போர்ட் மற்றும் வீசாவின் நம்பகத்தன்மை சரிபார்ப்பார்கள். இந்த வேலை முடிந்து விமானத்திற்குள் சென்றேன்.
அங்கு ஆழ்வார்குறிச்சியில் விஷிநீ நுண்ணுயிரியல் படித்த ராக்கேஷ் அவர்களைச் சந்தித்தேன். நிறையப் பேசினோம். அவர் ஒமனில் ஒரு ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் தரக்கட்டுப்பாட்டில் வேலை பார்க்கிறார்.
நான் பயணித்த விமானம் திருவனந்தபுரத்திலிருந்து 15ஆம் தேதி காலை 4.55 புறப்பட்டு மஸ்கட்டிற்கு காலை 8.30 பணிக்குச் சென்றது. திருவனந்தபுரத்தில் கும் மஸ்கட்டிற்கும் இடையே 2500 கிலோமீட்டராகும். மும்பையிலிருந்து மேற்கு நோக்கி ஒரு கோடு போட்டால் அது மஸ்கட்டைத் தொடும். ராக்கேஷிடமிருந்து விடை பெற்று குவைத் விமானத்தை நோக்கி நடந்தேன்.
இந்த விமானம் இந்திய நேரப்படி 9.40 மணிக்கு மஸ்கட்டிலிருந்து குவைத்திற்கு பயணிக்கத் தொடங்கியது. இது நம் நேரப்படி சுமார் 12.00க்கு குவைத் சென்றடைந்தது. குவைத்தில் அப்போது காலை 9.30 மணி. குவைத்திலிருந்து ஒரு நேர் கோட்டை கிழக்கு நோக்கி வரைந்தால் அது பாக்கிஸ்தான் நகரான கராச்சி மற்றும் இந்திய எல்லையில் உள்ள வாகா என்ற இடத்தை இணைக்கும்.
விமான வாசலில் சுதாகர் சிவசுப்பிரமணியம் என்ற பெயர் தாங்கிய பலகையுடன் ஒரு மிடுக்கான வாலிபன் நின்று கொண்டிருந்தார். இந்த வரவேற்பு நான் எதிர் பார்க்காதது. காரணம் விமான நிலையத்திற்கு வெளியேதான் இப்படி வரவேற்பது இயல்பு. இந்தியாவை விட்டுவரும் போது எவ்வளவு சோதனைகள் செய்தார்களோ அதே மாதிரி அடுத்த நாட்டிற்குள் நுழையும் போதும் முறையான சோதனைகள் அதிகமாக இருக்கும்.
ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னிடம் யாரும் பெயர் என்ன என்று கூட கேட்க வில்லை. என் பாஸ் போர்ட்டில் நுழைவு முத்திரை பெற்று இரண்டு நிமிடத்தில் என்னை விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துவந்தார் அந்த இளைஞர். என்னோடு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டுள்ளனர். எனக்கு மட்டும் ஏன் இந்த சலுகை எனக் கேட்டேன்.
“நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளர்” என அந்த இளைஞன் புன்முருவலிட்டான். ஆச்சரியமாக இருந்தது.? குவைத்தில் உள்ள தமிழ் பொறியாளர் குழுமத்தின் சக்தி இது எனப் புரிந்து கொண்டேன்.
மஸ்கட் மற்றும் குவைத்தின் விமானநிலையங்களுக்கும் நம் ஊர் விமானநிலையத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. ஆனால் என் கண்ணுக்கு ஓடுதளம் மேம்பட்டதாகத் தெரிந்தது. அதேமாதிரி இந்த நாட்டின் பெரிய சாலையின் தரம் சிறப்பாக இருந்தது. ஆனால் சிறிய சாலைகளில் குண்டு குழியும் பார்க்க முடிந்தது.
நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவரான பொறியாளர் சாமுவேல் மற்றும் பொறியாளர் கோபி ஆகிய இருவரும் விமான நிலையத்திற்கு வெளியே என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர். இவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். சாமுவேல் வள்ளியுரைச் சார்ந்தவர் மற்றும் கோபி பாண்டிச்சேரிக்காரர்.
இந்த நாட்டின் கட்டிடக்கலை அமெரிக்க நகரமான லாஸ் வேகாசைப் போல் இருப்பதாக உணர்ந்தேன். குடியிருப்பு பகுதிகள் அமெரிக்க டெக்சாஸ் மாநிலம் போல் தெரிந்தது.
நாம் பணத்தை ரூபாய் என அழைக்கிறோம். அவர்கள் தினார் என அழைக்கின்றனர். இந்தியாவில் நூறு பைசா ஒரு ரூபாய். குவைத்தில் 1000 பில்ஸ் ஒரு தினார். ஏன் அப்படி என எண்ணத் தோன்றுகிறதா? காரணம் குவைத்தின் பணம் மதிப்பு மிக்கது. நம் ஊர் பணத்தில் 260 ரூபாய் கொடுத்தால் பதிலுக்கு ஒரு குவைத் தினார் கிடைக்கும் .
குவைத்தில் ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலை நம் ஊர் பண மதிப்பில் வெறும் 26 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாதாரணப் பெட்ரோலின் விலை இன்னும் குறைவு. இதனால் இங்கு மாருதி ஆல்டோ மாதிரியான சிறிய ரக கார்களைப் பார்க்க முடியவில்லை. நான் சாலையில் உருவத்தில் பெரிய கார்களை மட்டுமே பார்த்தேன். மேலும் ஆச்சரியம் என்னவென்றால் குவைத்தில் நான் ஒரு பைக்கைக்கூட பார்க்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இரண்டு : ஒன்று இங்கு வெயில் அடிக்கிறது மற்றும் வெப்பம் அதிகம். மாறாக இங்கு பெட்ரோல் விலை மலிவோ மலிவு. இதுதான் இரண்டாவது காரணமாகும்.
மேலும் வினோதம் என்னவென்றால் பெட்ரோல் விலையை விடக் குடிதண்ணீர் விலை சற்று உயர்ந்து லிட்டருக்கு 30 ரூபாயாக இருந்தது .
நமது ஊரில் தண்ணீருக்காக நிறையக் கிணறுகள் உள்ளது போல் அங்கே நிறைய எண்ணைக் கிணறுகள் உள்ளன. இவை சில இடங்களில் தரையின் மேல் பரப்பிற்கு அருகிலேயே கிடைக்கிறது. சில இடங்களில் சுமார் 35,000 அடிவரை துளையிட்டு எடுக்கின்றனர். அங்கு ஒரு மணி நேரத்தில் பல லட்சம் லிட்டர் எண்ணைக் கிடைக்கிறது.
உலகத்தரத்தில் இங்கு ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை குவைத் ஆயில் நிறுவனம் நடத்துகிறது.
இந்த அருங்காட்சியகம் மண்ணில் எப்படி எண்ணை உருவாகியது விளக்குகிறது. மேலும் குவைத்தில் எங்கே எண்ணை அதிகம் இருக்கிறது என எப்படிக் கண்டறியப்படுகிறது என்பதனை விளக்குகிறது.
பூமியிலிருந்து உறிஞ்சி எடுத்த எண்ணெய்யை எப்படிச் சேமிப்பது என்பதனை காட்டுகிறது.? சேமித்த எண்ணெய்யை எப்படித் தரம் பிரிப்பது என்பதனை தெளிவு படுத்துகிறது.
இந்த எண்ணெய்யை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். முதல் தரம் நம் தேங்காய் எண்ணை மாதிரி இருக்கிறது. இதன் நிறமும் அடர்த்தியும் எனக்குத் தேங்காய் எண்ணெய்யையே நினைவுபடுத்தியது. இதனிலிலிருந்து நிறைய பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்கலாம். அதனால் இதன் விலை அதிகம்.
இரண்டாம் தர எண்ணை அடர்த்தி மற்றும் நிறம் சற்று அதிகரித்து, பார்க்க நம் விளக்கெண்ணெய் மாதிரி இருக்கிறது. இதன் விலை சற்று குறைவு.
மூன்றாம் தர எண்ணெய்யின் அடர்த்தி இன்னும் அதிகம். பார்க்க அடர் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இதிலிருந்து குறைவான அளவே பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கிறது. அதனால் இதன் விலை மலிவு.
தரம் பிரித்த எண்ணெய்யை எப்படி கப்பலில் ஏற்றுவது? என்பதனை அருமையாக விளக்குகிறது. இந்த எண்ணெய்யின் பயன்கள் என்ன என்பதையும் விரிவாகக் காட்டுகிறது. மேலும் எண்ணை எடுப்பதின் முக்கிய இடங்களை ஒரு தொலை நோக்கினால் பார்க்க வசதி செய்து வைத்திருந்தனர். அதனைப் பார்க்க அற்புதமாக இருந்தது. நவீன தொழில் நுட்ப உதவியுடன் அனைத்தையும் இந்த அருங்காட்சியகம் விளக்குகிறது.
இறுதியாக பத்து நிமிட படம் ஒன்றைத் திரையிட்டுக் காட்டினார்கள். அந்த படம் ஈராக் குவைத் போரைத் தெளிவாகப் புரியவைத்தது.
ஈராக் படை எடுப்பு குவைத்தை எப்படி எல்லாம் உருக்குலைய வைத்தது எனவும்; இந்த போரில் ஈராக் எப்படி கொடூரமாக எண்ணைக் கிணற்றுக்குத் தீயிட்டனர் என்பதனையும்; இதனால் குவைத் நாடு எப்படி கரும்புகையால் சூழப்பட்டது; இதனால் மக்கள் எப்படி அவதிப்பட்டனர் எனவும்; எத்தனை மாதங்கள் எண்ணைக் கிணறுகள் பற்றி எறிந்தன; அரும்பாடுபட்டு எப்படி இந்த தீயைப் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி அணைத்தனர் எனவும்; இந்த எண்ணைக் கிணற்றின் தீவைப்பு எப்படி மோசமான சுற்றுப்புறச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தியது எனவும் இந்த படம் விடையளிப்பதாக இருந்தது.
ஈராக்கு ஏன் குவைத் மீது இப்படிதாக்குதல் நடத்தியது.
அதற்கு விடையையும் டாக்டர் சுதாகர் பதிவில் கூறியிருந்தார். அந்த தகவல் தான் என்ன?
(குவைத் பயணம் தொடரும்)