தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் புதுக்குடியில் இருந்து கருங்குளம் வரை பல்லாயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. இப்பகுதிகளில், கடந்த ஒரு மாதங்களாக புதுக்குடியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள பொன்னங்குறிச்சி பகுதி வரை காய்ந்து விழும் இலைகளில் அடிக்கடி தீப்பிடிப்பதால் அப்பகுதி முழுவதுமே புகை மூட்டமாக காட்சி அளித்து வந்தது.
இந்நிலையில், பொன்னங்குறிச்சி மின்வாரிய அலுவலகம் பின் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு காய்ந்த இலைகளில் இன்று திடீரென தீ பிடித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் வதீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். தீ எரியும் பகுதிக்குள் தீயணைப்பு வாகனம் உள்ளே வர முடியாத நிலையில் தீயணைப்பு வீரர்கள், காய்ந்த இலைகளில் எரியும் தீ தொடர்ந்து எரியாத வகையில் காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். எனினும் காற்று அதிகமாக அடித்து வருவதால் ஆங்காங்கே காய்ந்து கிடந்த இலைகளில் தீ பிடித்து எறிவது தொடர்கிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


