உடன்குடி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் முத்து பிரவீன் (17), தேரியூர் செல்வராஜ் மகன் ஜெயராமன் (15). இவர்கள் 2பேரும் பைக்கில் உடன்குடியில் இருந்து மெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தாங்கையூரில் வந்தபோது, அவ்வழியே வந்த டாட்டா பிக்கப் வாகனம் மெயின் ரோட்டிற்கு வந்து திரும்பிய போது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் முத்து பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜெயராமன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த செட்டியாபத்து பிள்ளையார் கோவில் தெரு சிவசுந்தரபாண்டியன் மகன் புவனேஸ்வரன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


