தமிழகத்தில் புகையிலை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடைகளில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படியும், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பொற்செல்வன் அறிவுறுத்தலின்பேரிலும், துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரம் டைட்டன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் சாகிர் சங்கர் சீனிவாசன் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சவலாப்பேரி பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த புகையிலை விளம்பர பதாகைகளை அகற்றினர் மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது , குறிப்பாக பள்ளிகள் உள்ள பகுதிகளில் பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும், மீறி விற்பனை செய்பவர்கள் மீது பொது சுகாதார துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.


