தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வைத்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பி.லட்சுமணன் தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயி எஸ். செல்லத்துரை முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மண்டல இணை இயக்குனர் கணபதி கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சை அளித்தார். இந்நிகழ்வில் 250க்கும்
மேற்பட்ட கால்நடைகளான மாடுகள், ஆடுகள் , நாய் மற்றும் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் சிகிச்சைகள் செய்யப்பட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் . இறுதியாக ஆத்மா மாவட்ட விவசாய குழுத்தலைவர் சுந்தர விநாயகம் விவசாய பெருமக்களுக்கு நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


