தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் கடற்கரை விளையாட்டுகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று 26.4.23 தூத்துக்குடி மாநகராட்சி முத்துநகர் கடற்கரை பூங்காவில் பொதுமக்கள் பொழுதினை இனிமையாக கழிக்க ஏதுவாகவும் குறிப்பாக சிறுவர்கள் மகிழ்விக்கும் வகையிலும் கடற்கரை விளையாட்டுகளை துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.


