தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட தொண்டு நிறுவனம் கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. பாளை சித்த மருத்துவ மனையில் வைத்து கடந்த வாரம் இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தேசி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன மருத்துவ விஞ்ஞானி ஹரிஹர மகாதேவன், மற்றும் தொல்லியல் ஆர்வலர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சமூக ஆர்வலர் வெங்காடம் பட்டி திருமாறன் வழங்கினார். வரம் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விருது திரைப்பட நடிகர் ரஜினி அவர்களின் சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் மற்றும் பூ. திருமாறன் ஆகியோரின் கையெழுத்திட்டு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பூ. திருமாறன் கூறும் போது, “எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பிரமிக்க வைக்கும் பணி, நிகழ்த்திய அற்புதம், சீரிய சிந்தனைகளும், சிறந்த எழுத்துக்களும் என்ற தலைப்பில் அவர் பெருமையாகவும், சிறப்புறவும், மேம்படவும் பொருள்பட வாழ்த்து வரும் படைப்பாளி முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாண்டித்யா விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார். இவரால் மண்ணுக்குப் பெருமை” என்று கூறினார்.


