இன்று காலை நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தாமிரபரணி நதி சீரமைப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.
தாமிரபரணியில் மாசு உருவாகி இருப்பதையும், நதியை காப்பாற்ற மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்காக மதுரை உயர்நீதி மன்றத்தில் இருந்து நீதியரசர்கள் தாமிரபரணியை நேரில் பார்வையிட்டனர்.
அப்போதும் நானும் உடன் இருந்தேன். தாமிரபரணி வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் நதியை காப்பாற்ற 200கோடி பணம் ஓதுக்கீடு செய்துள்ளார்.
மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தின் கீழ் நிதி ஓதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன்.
அதற்கான பதில் என்ன என அமைச்சரிடம் கேட்கிறேன் என பேசினார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பட்டீல், நாடாளுமன்ற உறுப்பினர் தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பாக என்னிடம் முறையிட்டார்கள் .
தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை வந்ததும் அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாநில நதிகளை பராமரிக்க 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.


