செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏப்ரல் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடம் அரசு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் இன்று புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் பிபின் செல்வ பிரிட்டோ முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விக்னேஷ்வரன் கலந்துகொண்டு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார். 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மகேஷ்வரன், கிராம நிர்வாக அதிகாரிகள் தெற்குகாரசேரி கந்தசுப்பு, கருங்குளம் ராமசாமி, சேரகுளம் ரமேஷ், விட்டிலாபுரம் முத்து லெட்சுமி உள்பட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்துங்கநல்லூர் பஸ்நிலையத்தில் துவங்கிய பேரணியில் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


