தூத்துக்குடி மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தத்தனேரி கிராமத்தில் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் பேரிலோவன்பட்டி காச நோய் பிரிவு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தத்தனேரி கிராமத்தில் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம் (ACF) நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் உமாசங்கர் சுரேஷ் குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் மாரிச் செல்வம் முன்னிலை வகித்தார்.
நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகர், மற்றும் மருத்துவ குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) குழு, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் செல்வரதி, சுகாதார பார்வையாளர் அமுதா, இடைநிலை சுகாதார பணியாளர்கள் (MLHP) பிரேமா, கார்த்திக் பிரியா, கிருஷ்ணவேணி பெத்துலட்சுமி, கிருஷ்ண வேணி, மேகலா, சுகாதார தன்னார்வலர்கள் வீரவெக்கம்மாள், சுதாராணி, பிரேமா தேவி, லூர்து மிக்கேல் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


