தூத்துக்குடியில் மறுவாழ்வு மையப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மறுவாழ்வு மையப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மண்டல தலைவர் பாலகுருசுவாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.


