விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு செயல் அலுவலர் செந்தில்குமார் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு கவுன்சிலர்கள் அழகுபால் ஆசாரி, சுப்புராஜ், வெங்கடேஷ், குறிஞ்சி,பிரியா, சரண்யா ஸ்ரீதர், பிரதீபா, நூலகர் சுமித்ரா, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி,சமூக ஆர்வலர்கள் இளையராஜா மாரியப்பன், சோமசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ், மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


