தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
குமரிக் கடல் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (27.11.21) சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


