தூத்துக்குடியில் மாமன்னர் பாண்டியபதி 273ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்க அனைத்து பரத குல ஊர் நலக்கமிட்டியினர் இன்று அழைப்பிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


