தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (26.11.2025) உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


