ஆறுமுகநேரி அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று காலை 7 மணி அளவில் ஆறுமுகநேரி – காயல்பட்டணம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரயில் மோதியதில் அவரது உடல் இரண்டு துண்டானது.
இது குறித்து தகவல் அறிந்த நெல்லை இருப்புப் பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர், தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


