கார்கில் போரில் இந்தியா வெற்றிப்பெற்று இன்று 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்தியாமுழுவதும் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி தரைப்படைபிரிவு
தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி லெப்டினெட் கர்னல் பிரதோஷ் அவர்களின் உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் கார்கில் வெற்றித்தினம் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் கார்கில் விஜய் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இராணுவ வீரர்கள் நாப்சுபேதர்கள் திரு.சக்திவேல்,திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே கார்கில் போர் குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கார்கில் வீரர் லேன்ஸ் நாய்க் அருணாசலம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தேசிய மாணவர்படை மாணவர்களும் கார்கில் போர் குறித்து சிறப்புரையாற்றினர். விழாவில் பள்ளித்தலமை ஆசியர் முத்துசிவன், முதுகலை ஆசிரியர்கள் முத்தையா, போ.பாலசுப்பிரமணியன் யோகா மாஸ்டர் இசக்கிமுத்து , முன்னாள் என்சிசி அலுவலர் செளந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கார்கில் வீரர் அருணாசலம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் என்.சி.சி அலுவலர் மாணிக்கம் செய்திருந்தார்.


