தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் ஆதிமணி செல்வம் (30). இவர் நேற்று இரவு 10.30 மணிளவில் மோட்டார் பைக்கில் திருநெல்வேலி – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். தெய்வசெயல்புரம் சந்திப்பு அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஆதிமணி செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) முருகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து லாரியை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம், தாழையூத்து, தெற்கு செழியநல்லூர், கிழக்கு தெருவைச் சேர்ந்த சேதுராமன் மகன் வெள்ளைப்பாண்டி (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


