ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி 27 மே 1962 அன்று இந்தியாவில் உள்ள பம்பாயில் பிறந்தார். முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஆல்-ரவுண்டர் ஆவார். அவர் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார். அவரது சர்வதேசத் தொழில்வாழ்க்கையானது அவருக்கு 18 வயதிருக்கும் போது ஆரம்பித்து 12 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. அவர் தனது தொழில்வாழ்க்கையை ஒரு முறைப்படியான பந்து வீச்சாளாராக ஆரம்பித்தார். ஆனால் படிப்படியாக பேட்ஸ்மேனாக அதிகத் திறமையுடனும் பந்தும் வீசக்கூடியவராக மாறினார்.
ஒரு பேட்ஸ்மேனாக குறிப்பாய் அவரது நேர்த்தியான “சப்பாத்தி அடி” யானது (பிளிக் ஆப் த பேட்ஸ்) அவருக்கு அடையாள அடியாக இருந்தது. ஆனால் தேவைப்படும் போது அவரால் அடித்தாடும் வேகத்தை உயர்த்திக்கொள்ளவும் முடிந்தது. அவர் சராசரி உயரத்திற்கு அதிகமாக இருந்த காரணத்தாலும் விளையாடும் போது செங்குத்தாக நிற்பதாலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரால் குறைவான அடிகளையே கையாள முடிந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிக உயரமாக அடிக்க முடிந்தது. சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நடுநிலை வரிசையிலோ களம் இறங்குவார்.
அவரது தொழில் வாழ்க்கையில் முக்கியப் பகுதியானது 1985 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வான போது நிகழ்ந்தது. முதல் வகுப்பு கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த மேற்கு இந்தியரான கேரி சோபரின் சாதனையை அதே பருவத்தில் சாஸ்திரி சமன் செய்தார். அவர் ஒரு ஆற்றல்மிக்க தலைவராக இருப்பார் எனக் கருதப்பட்டார். ஆனால் கிரிக்கெட்டிற்கு வெளியே அவரது நற்பெயர், காயங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் ஆட்டத்திறனை இழந்த மனப்பாங்கு ஆகியவற்றால் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்தியாவின் அணித்தலைவராக விளையாடினார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் பம்பாய்க்காக விளையாடினார். மேலும் அவரது இறுதி ஆண்டு விளையாட்டில் அவர்களது அணி ரஞ்சி கோப்பை வெற்றி பெற காரணமாக இருந்தார். மேலும் இவர் கிலாமோர்கனுக்கான கவுண்டி கிரிக்கெட்டின் நான்கு பருவங்களில் ஆடியுள்ளார். அவர் முட்டி காயத்தில் அடிக்கடி அவதிப்பட்டதால் 31 வயதில் பணி ஓய்வு பெற வற்புறுத்தப்பட்டார். தற்போது அவர் TV கிரிக்கெட் கருத்துரையாளராக அறியப்படுகிறார்.
சாஸ்திரியின் குடும்பம் தொடக்கத்தில் கர்நாடகாவின் மங்களூரில் இருந்து வந்ததாகும். ஆனால் அவர் மும்பை என அழைக்கப்படும் பம்பாயில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தையான எம்.ஜெயத்ராதா சாஸ்திரி ஒரு மருத்துவர் ஆவார். மேலும் அவரது குடும்பம் திடமான கல்விசார்ந்த பாரம்பரியம் உடையதாகும். அவர் கிரிக்கெட்டை அக்கறையுடன் விளையாட ஆரம்பிக்கையில் பதின்வயதினராக மட்டுமே இருந்தார். மும்பையின் மதூங்காவில் டான் போஸ்கோ பள்ளியுடன் 1974 பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டியான கில்ஸ் ஷீல்டில் சாஸ்திரியின் அணி இறுதிப் போட்டியை அடைந்தது. ஆனால் வருங்கால இரண்டு ரஞ்சி விளையாட்டு வீரர்களான ஷிஸ்ஷிர் ஹட்டன்காடி மற்றும் ஜிக்னேஷ் சங்கானி ஆகியோர் இருந்த செயின்ட் மேரிஸுடன் அவரது அணி தோற்றுப்போனது. அடுத்த ஆண்டு சாஸ்திரியின் தலைமையில் டான் போஸ்கோ கில்ஸ் ஷீல்டை வென்றது. 27 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் படி சாஸ்திரி இறுதிப் போட்டியில் அதிக பட்ச ரன்களை எடுத்து சாதனை புரியக் காரணமாக இருந்தார்.
பள்ளியில் அவரது பயிற்சியாளரான பீடி தேசாய் ஒரு காலத்தில் டாட்டாஸ் அண்ட் தாதர் யூனியன் வீரராக இருந்தவர் ஆவார். டான் போஸ்கோ பள்ளிகளின் கிரிக்கெட்டில் மரபுவழியாக பெரிய சக்தியாக இல்லாத போதும் பின்னர் சாஸ்திரி வணிகம் பயின்ற ஆர்.ஏ. போடார் கல்லூரியானது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை வழங்கியுள்ளது. வசந்த் அம்லாடி மற்றும் குறிப்பாக வீஎஸ் “மார்ஷால்” பட்டேல் ஆகியோர் சாஸ்திரி ஒரு கிரிக்கெட் வீரராக வளர்ச்சி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருந்தனர். இளநிலைக் கல்லூரியில் அவரது இறுதி ஆண்டில் பம்பாயுடன் ரஞ்சி கோப்பை யில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகள் மற்றும் 292 நாட்களுடன் பம்பாய்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்தார்.
1980–81 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திற்கு 19 வயதிற்கு கீழே இருக்கும் இந்திய அணி திட்டமிடப்பட்டது. சாஸ்திரி தேசிய பயிற்சியாளர் ஹெமூ அதிகாரி மூலமாக கடைசி நிமிடத்தில் பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டார். முன்னோட்ட விளையாட்டில் இரண்டு அணிகளில் ஒன்றில் சாஸ்திரி தலைமை ஏற்றிருந்தார். பின்னர் 19 வயதிற்கு கீழே உள்ள அணிக்கு தலைமை வகிக்கும் படி கேட்கப்பட்டார். எனினும் இந்த சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டது. இந்த அணி பின்னர் ஸ்ரீலங்கா சென்றது. ஆனால் அங்கு நடந்த போட்டிகள் அடிக்கடி மழையின் காரணமாக தடைபட்டன.
அவரது முதல் இரண்டு ரஞ்சி பருவங்களில் 6-61 என்ற வீதத்தில் பந்து வீசியது மட்டுமே அவரது குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது. இதை 1979–80 ரஞ்சி இறுதிப் போட்டியில் டெல்லிக்கு எதிராக எடுத்தார். இறுதியில் இப்போட்டியில் பம்பாய் தோற்றது. இதன் அடுத்த பருவத்தில் கான்பூரில் உத்திரப்பிரதேசத்திற்கு எதிராக அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் காயமடைந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷிக்குப் பதிலாக விளையாடுவதற்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் அணியில் இணைவதற்கு அழைக்கப்பட்டார். சாஸ்திரி முதல் டெஸ்டிற்கு முந்தைய நாள் இரவு வெல்லிங்டன் வந்து சேர்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணித்தலைவரான ஜெஃப் ஹோவர்த்துக்கு எதிராக அவர் வீசிய ஓவரில் ரன் எதும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு பந்துகளுக்கு மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த அனைத்து விக்கெட்டுகளும் திலிப் வெங்சர்கார் பிடித்த கேட்ச்சால் அவுட் ஆகினர். இதனால் நியூசிலாந்தின் இன்னிங்ஸ் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்தது. மூன்றாவது டெஸ்டில் அவருடைய ஏழு விக்கெட்டுகள் அவருக்கு ஆட்ட நாயகன் விருதை வெல்ல முடிந்தது. மேலும் இந்தத் தொடரில் இரு அணி பக்கங்களிலும் அதிகமானதாக அவர் எடுத்த 15 விக்கெட்டுகள் இருந்தது.
அவரது டெஸ்ட் அறிமுகத்தின் பதினெட்டு மாதங்களுக்கு உள்ளாகவே பேட்டிங் வரிசையில் பத்தாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறினார். அவரது முதல் தொடரில் கருத்துரைத்து விஸ்டன்” எழுதுகையில் “அவரது அமைதி, வரிசையில் அவரது உணர்ச்சி பூர்வமான பேட்டிங்” ஆகியவற்றைப் பற்றிக் கருத்துரைத்தது. அவரால் உபயோகமான ஆல்-ரவுண்டராக வளர்ச்சி பெற முடியும். மேலும் அவரது பீல்டிங்கும் நன்றாக உள்ளது” என்றது. அவரது தொழில் வாழ்க்கையின் இறுதியில் ஒன்றில் இருந்து பத்து வரை அனைத்து நிலையிலும் அவர் பேட்டிங் செய்தார். அவரது சொந்த ஆர்வத்தால், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக பவுலிங்கை தவிர்த்தார். இது அவரது ஆட்டத்திறமைகளில் எதிரொலித்தது. எனினும் பருவம்-தொடங்கும் 1981 இராணி கோப்பையில் 9-101 என்ற கணக்கில் அவர் விக்கெட்டுகளை சாய்த்தது சுமார் இருபது ஆண்டுகால போட்டி சாதனையாக நிலைத்து நின்றது.
வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களான பிரனாப் ராய் மற்றும் குலாம் பார்க்கர் திறம் பட செயல்படாததால் 1982 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக த ஓவலில் சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராக இறங்க நேர்ந்தது. அந்த போட்டியில் 66 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தானில் விளையாட இருந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறினார். மீண்டும் கராச்சியில் நடந்த இறுதி டெஸ்டில் களம் இறங்கினார். அப்போட்டியில் இம்ரான் கானின் (அவரது தொழில் வாழ்க்கையின் உச்சகட்டத்தில் இருந்த சமயம்) வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவரது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். பின்னர் அவர் ஆண்டிகாவில் மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக மற்றொரு சதத்தை நிறைவு செய்தார். கொடுத்த வாய்ப்பில் இந்தியக் கிரிக்கெட்டில் போதுமான அளவு ஈர்த்தார். இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் பெயர் பெற்றார்.
1983 உலகக்கோப்பையில் மிகவும் முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்கு சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த ஆண்டிற்குப் பிறகு மேற்கு இந்தியத்தீவுக்கு எதிரான தொடரில் மேற்கு இந்தியத்தீவு வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சைத் தனது பேட்டிங் திறமையால் ஆதிக்கம் செலுத்தி மீண்டும் தனது திறமையை சாஸ்திரி நிரூபித்தார்.


