லாரன்ஸ் எட்வர்ட் “லாரி” பேஜ் ( மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு (pagerank algorithm) இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.
இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு செர்கே பிரின் என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள்.


