பிரகாஷ் ராஜ் (26 மார்ச்சு 1965) என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தனது காஞ்சிவரம் தமிழ்த் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் பெங்களூரில் 26 மார்ச் 1965 அன்று ஒரு துளு தந்தைக்கும் மற்றும் கன்னட தாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது சகோதரர் பிரசாத் ராஜ் அவரும் ஒரு நடிகர் ஆவார்.இவர் தனது பள்ளிப்படிப்பை புனித ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு தனது உயர் நிலைப்படிப்பை பெங்களூர் புனித ஜோசப் வணிகக் கல்லூரியில் பயின்றார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் ராஜ் தனது குடும்பப் பெயரை ‘ராஜ்’ என்று மாற்றினார். இன்னும் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் பிரகாஷ் ராய் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் 1994 இல் நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார்.அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று ஆகஸ்ட் 24, 2010 அன்று நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.


