காயல்பட்டினத்தில் அரசு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் 33% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 23 சதவிகித மரங்கள் மட்டுமே உள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் குறைந்து 4.5 சதவீத மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பூமியில் வெப்ப சலணம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரிப்பதனால் மழை அளவு குறைந்து காடுகளில் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காமல் சிறிய வகை பறவைகள், விலங்குகள், மருத்துவ குணமிக்க மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பாதிப்பை தடுக்கின்ற வகையில் டிபி சோலார் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் காயல் இயற்கை வளம் அமைப்பு சார்பில் காயப்பட்டணம் பகுதியில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக காயல்பட்டினத்தில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும்பனி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காயல் இயற்கை வளம் அமைப்பின் தலைவர் சின்னத்தம்பி, செயலாளர் ஜாஹிர் உச


