செய்துங்கநல்லூரில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது.
சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல் துறையின் சார்பில் நடந்த தேர்வில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு இன்று நடந்தது. இதில் 1150 பேர் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் 5 பிரிவாக 700 பேருக்கும், சீனியர் பிரிவில் 4 பிரிவாக 450 பேருக்கும் தேர்வு நடந்தது.
தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் டாக்டர். ஆவுடையப்பன் பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளர்களாக துறைத்தலைவர்கள் ஆறுமுகசேகர் மற்றும் ஜான் செண்பகத்துரை பணியாற்றினர்.
தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி விரிவுரையாளர்கள் சந்திரசேகர், கேசவர்த்தினி, செல்வி குமார், அனுலா ஜானகி, கனிமொழி, சீனிவாசன், மாரி ராஜ்குமார், ராகுல், கலாலட்சுமி, கவிதா, சுடலைமணி, சிவசுப்பிரமணியன், ராஜா ஹைதர் அலி, குரூஸ் அம்பரூஸ், காந்தி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கல்யாணி, ஆறுமுகம், ஆனந்தவல்லி, மாரியப்பன், குமார், லட்சுமணன், பால்துரை, ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


