
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 04.03.2022 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 12.03.2022 சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.