வாகைகுளம் விமான நிலையத்தில் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கனிமொழி எம்.பி முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய சேர்மனாக இருந்து வருபவர் கோமதி ராஜேந்திரன். இவர் அதிமுகவில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்பட கட்சியினர் உடன் இருந்தனர்.