தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 396 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 396பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 318 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 432 உயிரிழந்துள்ளனர். தற்போது 2412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.